பசி மறந்து உழைக்கும் தகப்பன்
தனை மறந்து நேசிக்கும் தாய்
உலகம் மறந்து விளையாடும் தம்பி
நேரம் மறந்து சண்டையிடும் தமக்கை
சோகம் மறந்து சிரிக்கவைக்கும் சிநேகிதர் -
இவை அனைத்தையும்விட சிறந்தவளா காதலி?
கேட்டான் அவன்.
என் முகத்தில் சிறு புன்னகை!
"ஆம்" என்று சொல்லாவிட்டாலும்,
ரத்த உறவுகளுக்கு நிகர் காதலி, என்றேன்!
தவறொன்றும் இல்லை.
தாய் தகப்பன் தம்பி தமக்கை
இவர்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட பரிசு -
நம்மை தாங்கும் தேர்!
நண்பர்கள் காலத்தால் வழங்கப்பட்ட வெகுமதி
நம்மை வழிகாட்டிச் செல்லும் குதிரைகள் !
அவள், என் பயணத்தை என்னுடன் சேர்ந்து புணைய
நானே தேர்ந்தெடுத்த சக பயணி!
என்னைத் தேர்ந்தெடுத்த தேவதை!
நானே எனக்கு கொடுத்துக்கொண்ட விருது - விருந்தும்கூட!
எங்கோ பிறந்து, வளர்ந்து, சமைந்த அந்த மங்கையின்
ஒரு சொட்டு குருதிகூட கலக்காத உறவு
தாய் தகப்பனின் உறவுக்கு நிகர்!